ராஜபாளையம் மில்ஸ் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி.



விருதுநகர் மாவட்டம்,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தூத்துக்குடி கிளை சார்பில் 22 மார்ச் 2024 அன்று ராஜபாளையம் மில்ஸி ஊழியர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி  நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலப் பயியாளர் திரு.இ. பிளைத் சுதர் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியை வழங்கினார். 


இப்பயிற்சி முகாமில், அவசரகால வெளியேற்ற நடைமுறைகள், விபத்துகளில் சிக்கியவர்களைத் தேடி பாதுகாப்பாக மீட்பது, காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவுகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதங்களைக் கண்டறிந்து முதலுதவி அளிப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.



இம்முகாமில் ராஜபாளையம் மில்ஸ் மேலாளர், தூத்துக்குடி மாவட்ட கிளை நிர்வாக குழு உறுப்பினர் திரு.மோகன்  அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி குறித்து விழிப்புணர்வு வழங்கினார், உடன் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அவர்கள் பங்கேற்றார்.

To Top