பன்னாட்டு ரெட்கிராஸ் குழு
THE INTERNATIONAL COMMITTEE OF RED CROSS - ICRC
பன்னாட்டு ரெட்கிராஸ் குழு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இன்றைய "பன்னாட்டு ரெட்கிராஸ் குழு" 1863 ஆம் ஆண்டில் ஜெனீவாவின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் ஜீன்-ஹென்றி டூனன்ட், குஸ்டாவ் மொய்னியர், லூயிஸ் அப்பியா, தியோடோர் மௌனோயர் மற்றும் ஜெனரல் கில்லோம்-ஹென்றி டூஃபோர் ஆகியோரால், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு சர்வதேசக் குழுவாக நிறுவப்பட்டது.
இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, 1859 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹென்றி டூனன்ட் லோம்பார்டி பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் சோல்ஃபெரினோ போரைக் காண நேர்ந்தது. போர்க்களத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்துகொண்டிருந்த காயமடைந்த வீரர்களின் அவல நிலையைக் கண்டு அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, உள்ளூர் மக்களின் உதவியுடன், தன்னால் இயன்றவரை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். அவர் 'சோல்ஃபெரினோவின் ஒரு நினைவு' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார், அது ஐரோப்பா முழுவதையும் உலுக்கியது. அந்தப் புத்தகத்தில், டுனான்ட் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக, போர்க்களத்தில் காயமடைந்தவர்களைக் கவனித்து உதவத் தயாராக இருக்கும் செவிலியர்களைக் கொண்ட நிவாரணச் சங்கங்கள் அமைதிக்காலத்தில் நிறுவப்பட வேண்டும். இரண்டாவதாக, இராணுவ மருத்துவ சேவைகளுக்கு உதவ அழைக்கப்படும் தன்னார்வப் பணியாளர்கள் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தகுதியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும். இந்த யோசனையே இன்று ரெட் கிராஸ் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கம் என்று அழைக்கப்படும் அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. மேலும் இக்கருத்துகளே பன்னாட்டு மனிதநேயச் சட்டங்கள் உருவாகவும் காரணமாயிற்று.
இவ்வியக்கத்தின் அடிப்படை அமைப்பான பன்னாட்டு ரெட்கிராஸ் குழு இன்னும் தனது ஆரம்ப கால நோக்கப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது. போர்க்காலங்களில் காயம்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாத்தும் வருகிறது. மேலும் உதவிகள் பல புரிந்து தமது பணியினைச் சுறுசுறுப்புடன் ஆற்றிவருகின்றது. பன்னாட்டு மனிதநேயம் சட்டம், மற்றும் அதன் விரிவாக்கப் பணிகளையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.
உலகளாவிய ஒப்பந்த ஆணை
பன்னாட்டு ரெட்கிராஸ் குழுவானது போரில் பாதிக்கப்பட்டோர் போர்க்கைதிகள், சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள், காயமுற்றோர், பணியாளர், பணிநிமித்தம் வாழ்வோர், இடமாற்றம் செய்யப்பட்டோர் ஆகியோர் சார்பாக, போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு இடையே நடுநிலைத் தொடர்பாளராகப் பணிபுரிகிறது. இக்கழகம் பன்னாட்டு மனித நேயச் சட்டத்துக்கு உட்படாத நிலைமையிலும் தனது சேலையைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, உள்நாட்டுத் தொல்லைகள், இயற்கை சிற்றங்களினால் ஏற்படும் கொந்தளிப்பு போன்றவை நடைபெறும் காலங்களில் தாமாகவே தமது உதவியினைச் செய்யலாம். மேலும் இக்கழகம் ஏராளமான அரசியல் கைதிகளையும் சந்திக்க இயலும் இரண்டாம் உலகப் போரிலிருந்து 90 நாடுகளில் 5,00,000க்கும் மேற்பட்டவர்களை இதுவரை சந்தித்திருக்கிறது)
இப்பன்னாட்டு ரெட்கிராஸ் குழு பன்னாட்டு மனிதநேயச் சட்டத்தினை ஊக்கமடையச் செய்து வளர்க்கின்றது. அத்துடன் அதனை மேற்பார்வையிடுவதையும் தனது கடமையாய் கொண்டிருக்கிறது. மேலும் இக்கழகம் பல்வேறு நாடுகளிடமும் இராணுவப் பிரதிநிதிகளிடமும் மனிதநேயச் சட்டம் மற்றும் மனிதநேயக் கொள்கைகளைப் பரப்புவதற்கு உறுதி பூண்டிருக்கிறது. இது பல்கலைக் கழகங்கள், பள்ளிகள் போன்ற இடத்தில்மட்டுமில்லாது பொதுமக்கள் மத்தியிலும் இப்பணியினைச் செய்ய உறுதி பூண்டது.
இப்பன்னாட்டு ரெட்கிராஸ் குழு பன்னாட்டு ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றது. மேலும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு பெருமை சேர்ப்பதில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஓர் உன்னதப் பங்கிளையும் இச்சங்கம் வகிக்கின்றது. இக்கழகம் அதன் நிபந்தனைகள், உறுதியாக்கப்பட்ட வழிமுறைகளின்படி புதிய தேசிய சங்கங்களையும் தோற்றுவித்து அவைகளை இவ்வியக்கத்தின் அங்கத்தினராக்கும் தகுதியையும் பெற்றுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம்
தேசிய சங்கங்கள் ஓர் நாட்டிற்குள் அந்த நாட்டின் பொது அதிகாரிகளுக்குத் துணையாகச் செயல்படுகின்றன. இத்தேசிய சங்கங்கள் போர்க் காலங்களிலும் சரி மற்ற காலங்களிலும் சரி அளவற்ற பொறுப்புக்களைப் பெற்றுள்ளன. மருத்துவமனைகளை அமைத்து அதனை நடத்துதல், மருத்துவச் செவிலியர்களுக்கான பயிற்சி அளித்தல், இரத்த தான நிலையங்களை ஏற்படுத்துதல், ஊணமுற்றோர்க்கு உதவியளித்தல், முதியோர்களுக்கு உதவி செய்தல், மருத்துவ உதவி ஊர்திகளை அளித்து உதவுதல், சாலை, கடல் மற்றும் மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவை அவற்றுள் சிலவாகும்.
இத்துடன் வெள்ளம், பூமியதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை சிற்றங்களின் போதும் அவசரகால உதவியினை அளிக்கும் பொறுப்பினையும் பெற்றுள்ளது. இதுபோன்ற சேவைகள் உலகெங்கிலும் இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் இச்சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
1919ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 'ரெட்கிராஸ் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (லீக் என்று முன்பு அழைக்கப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்ட தேசீய சங்கங்களை வகைப்படுத்தி அவைகளின் மையச் செயலகமாகப் பணியாற்றுகிறது. தேசிய சங்கங்களின் செயல்பாடுகளை மஊக்குவிப்பதும், அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிவதும் இதன் முக்கியப் பணிகளாகும். ஒரு நாடு குறிப்பாக இயற்கை சீற்றத்தாய் மிகவும் பாதிக்கப்படும்போது இக்கூட்டமைப்பாளது பள்ளாட்டு அளவில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. புகலிடங்களை அமைத்தல், நாசவேலைகளினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளுதல் போன்ற பணிகளைச் செய்வதோடு அவசரகால பொருட்களைச் சேமித்துவைத்து உதவி செய்ய தயாராக இருப்பதும் இதன் வேலைகளில் ஒன்றாகும். இக்கூட்டமைப்பின் கட்டளைக் குறிப்பானது போர் நடக்காத வெளியிடங்களில் அகதிகளுக்கு உதவி செய்வதற்கும் அழைப்புவிடுக்கின்றது. போர் நடக்காத காலங்களில் இவ்வமைப்பானது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் துணையாளராக செயல்படுகின்றது.
தற்போது 175 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு 'ரெட்கிராஸ்' மற்றும் ரெட்கிராஸன்ட் சங்கங்கள்' யாவும் பன்னாட்டு ரெட்கிராஸ் குழு' மற்றும் 'தேசீயச் சங்கங்களின் கூட்டமைப்பு முதனைவைகளின் ஒருங்கிணைப்பேயாகும். இவ்வியக்கத்தின் எல்லா அமைப்புகளும் நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை பன்னாட்டு பேரவையில் கூடுகின்றன. இக்கூட்டத்தில் ஜெனிவா ஒப்பந்தத்தின் தேசிய சங்கங்களும் கலந்து கொள்கின்றன. மேற்சொன்ன இப்பேரவையானது இப்புனித இயக்கம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப்பற்றி ஆய்வு செய்கின்றது. அத்துடன் மனித நேயச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யவும் இதற்கு உரிமை உண்டு. மேலும் இது பன்னாட்டு அமைப்புகளை ஒன்றாக இணைக்கும்படியான தீர்மானங்களையும் அங்கீகாரம் செய்கின்றது.
தலையிடும் உரிமை
போரின்போது போர்களத்தில் இறக்கும் தருவாயிலுள்ள வீரர்களை காக்கவேண்டும் என்ற மனிதாபிமான நற்செயலுக்கு ஹென்றி டுனாண்ட்தான் முழுமுதற் காரணம் என்று கூறமுடியாது. எனினும் பன்னாட்டு மனித நேயச்சட்டம் என்ற அமைப்பின் கீழ் அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்து தம்மை உறுப்பினர்களாக்கிக் கொண்டுள்ளன. எனவே இவ்வொப்பந்தம் ஏற்படுவதற்கு மூல காரணம் ஹென்றி டூனாண்ட் என்பதை யாரும் மறுக்க இயலாது. இவ்வுடன்பாட்டின் மூலம் போரில் காயம் பட்டோர்கட்கும் அவர்கட்கு உதவி புரிவோர்கட்கும் பாதுகாப்பு தரப்படுகின்றது. இந்த மனிதாபிமான செயல்பாடு பெருந்தகை டூணான்டின் மனிதாபிமானச் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியேயாகும்.
அக்கால அரசியல் உலகில் பலமிக்க நாடுகள் என்று சிறப்பு பெற்ற 12 நாடுகள் ஜெனிவாவில் 1864ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூடி 10 பகுதிகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 'ஜெனிவா ஒப்பந்தத்தை' உருவாக்கின. இவ்வுடன்படிக்கையின்படி போரின்போது படுகாயம் அடைந்தோரை எடுத்துச் செல்லும் வாகனங்கள், இராணுவ மருத்துவ நிலையங்கள், நடுநிலை வகிப்பவைகளாகவும், மருத்துவ நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நடுநிலை வகிப்பவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மேற்கண்ட நிறுவனங்களுக்கும், அதில் பணிபுரிவோருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுதல் வேண்டும். அவர்கள் தகுந்த முறையில் மதிக்கப்படுதல் வேண்டும். போரில் ஈடுபட்டோரில் காயமுற்றோர் மற்றும் பிணியாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் பாரபட்சமின்றி உதவியளிக்கப்படல் வேண்டும். மேற்கண்டவையாவும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதுகாப்பினை உறுதி செய்யுமுகத்தான் வெள்ளை நிற அடிப்பரப்பில் சிவப்பு சிலுவை என்ற சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பன்னாட்டு ரெட்கிராஸ் கூட்டமைப்பு
INTERNATIONAL FEDERATION OF RED CROSS & RED CRESCENT SOCIETIES - IFRC
பன்னாட்டு ரெட்கிராஸ் கூட்டமைப்பு என்பது எந்தவொரு அரசாங்கத்தையும் சாராத, அரசியல், மத மற்றும் இனப் பிணைப்புகளிலிருந்து விடுபட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். இது அனைத்து நாடுகளும் அனைத்து தேசிய சங்கங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பின் தலைமையகம் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பு மே 5, 1919 அன்று பி. ஹென்றி டேவிட்சன் என்பவரால் நிறுவப்பட்டது. இது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பொது நலனை விரிவுபடுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் நலப்பணிகளை வலுப்படுத்தி ஒருங்கிணைப்பதும், புதிய சங்கங்கள் உருவாவதை ஊக்குவிப்பதற்கும் செயல்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பு தேசிய சங்கங்களின் நிவாரணப் பணிகளை (மோதல் பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில்) ஒருங்கிணைக்கிறது. இது மேம்பாட்டுத் திட்டங்களையும் ஊக்குவிக்கிறதுடன், தேசிய கிளைகளை உருவாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவுகிறது. மேலும், இந்தக் கூட்டமைப்பு ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் அமைப்பின் கொள்கைகளையும் விதிகளையும் நிலைநிறுத்தப் பாடுபடுகிறது, அத்துடன் தேசிய சங்கங்களுக்கு ஒரு சர்வதேசத் தொடர்பு அமைப்பாகவும் செயல்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் நிலையை மேம்படுத்துவதையும், தேசிய சங்கங்களின் உலகளாவிய திட்டங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது போர் மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள், சமூக சேவைகள் மற்றும் தேசிய சங்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
சர்வதேச ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் கூட்டமைப்பு, அதன் உறுப்பு தேசிய சங்கங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உதவுவதில் மூன்று முக்கிய செயல்பாடுகள் மூலம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது அவற்றை ஊக்குவித்தல், ஆதரவளித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், அத்துடன் உறுப்பு தேசிய சங்கங்களுக்கு இடையே கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை முக்கிய பங்காகக் கொண்டுள்ளது.
இந்த இயக்கம், முறையாக அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்கள், ஜெனிவா உடன்பாடுகளில் கையொப்பமிட்டவர்கள். அனைத்து நாடுகளிலும் சேவை செய்வோர் தன்னாட்சி நிலை (சுதந்திரமாக) ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.