ஜீன் ஹென்றி டியூனாண்ட் (Jean Henry Dunant) அவர்கள் ரெட்கிராஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் ஒரு வணிகக்குடும்பத்தில் 1828ம் ஆண்டு மே மாதம் 8ம் நாள் பிறந்தார். ஹென்றி அவர்கள் இளம் வயதிலேயே தொண்டுள்ளம் ஒரு கொண்டவராகத் திகழ்ந்தார்.
ஜீன் ஹென்றி டியூனாண்ட் வாழ்க்கைக்குறிப்பு...
சோல்ஃபெரினோ போர்
காற்றாடி (Wind Mill) விற்பனை வியாபார நோக்கத்துடன் ஹென்றி டியூனாண்ட் அவர்கள் 1859 ஆம் ஆண்டு பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அவர்களை சந்திக்க இத்தாலி சென்றார். இந்த நேரத்தில், வடக்கு இத்தாலியின் லோம்பார்டி சமவெளியில் ஜூன் 24, 1859 அன்று நடந்த சோல்ஃபெரினோ போரை அவர் நேரில் கண்டார். போரில், பிரான்ஸ் (France) மற்றும் சார்டினியா (Sardinia) வீரர்களை, ஆஸ்திரியா (Austria) நாட்டு வீரர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
அதிகாலை 3 மணி
முதல் மாலை 6 மணி வரை போர் நீடித்தது. 3 லட்சம் வீரர்கள் 10 மைல் தூரத்திற்கு
ஒருவரையொருவர் எதிர்த்து நின்று போரிட்டனர். மறுநாள் காலையில் ஒரு கோரமான காட்சி
காணப்பட்டது. ஒரே நாளில், 40,000 வீரர்களுக்கு
மேல் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் மற்றும் காணாமல் போயினர். காயமடைந்த
வீரர்கள் போதுமான மருத்துவ உதவியின்றி, குடிக்க தண்ணீர்
மற்றும் உணவு ஏதுமின்றி கதறிக் கொண்டிருந்தனர்.
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பகுதிக்குச் சென்று காயமடைந்த வீரர்களுக்கு உதவ தன்னார்வலர்களையும், மருத்துவர்களையும் ஒன்று திரட்டினார். வீரர்கள் அவரை வெள்ளை மாமனிதர் (The Gentleman in White) என்று அழைத்தனர். உதவிக்கு வந்த தன்னார்வலர்கள் முதலுதவியில் முறையாகப் பயிற்சி இல்லாதவர்களாக இருந்தனர், அவர்கள் காயம் பட்ட தங்கள் சொந்த நாட்டு (பிரெஞ்சு) வீரர்களுக்கு மட்டுமே உதவினார்கள்.
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி
போரில் காயம் பட்ட அணைத்து வீரர்களுக்கும் உதவினார். இச்செயலை கண்ட ஒரு பெண்மணி
"ஐயோ அவன் விரோதி! (He is
Enemy) என்றார். அதற்கு ஹென்றி
அவர்கள் "விரோதியும் மனிதன் தான்" (He is a Man) என்று
பதிலுரைத்தார். அவர் சொன்ன வார்த்தைகள் அனைவரது உள்ளத்தையும் நெகிழ்ச்சியுறச்
செய்தது.
ரெட் கிராஸ் இயக்கம்
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் முதலாவது திட்டத்தின் விளைவாக ரெட்கிராஸ் இயக்கம் உருவானது.
அவரது இரண்டாவது திட்டத்தின் விளைவாக முதலாவது ஜெனிவா ஒப்பந்தம் ஏற்பட்டு சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் (IHL - International Humanitarian Law) இயற்றப்பட்டன.
ஹென்றி
டியூனாண்ட் அவர்கள் இந்தப் புத்தகத்தை தனது சொந்த செலவில் வெளியிட்டு பல்வேறு
நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு நகல்களை வழங்கினார். ஜெனீவாவில்
நடந்த பொதுச் சபையில் ஹென்றி அவர்களின் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை செயல்படுத்த பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது:
1) குஸ்தாவ் மொய்னியர்
2) ஜெனரல் ஹென்றி டபோர்
3) டாக்டர் லூயிஸ் அப்பையா
4) டாக்டர் தியோடார் மொய்னியர்
5) ஜீன் ஹென்றி டூனான்ட்
முதல் ஜெனீவா
மாநாடு
இக்குழுவின் திட்டப்படி, 1863 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் 16 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் விளைவாக, ஆகஸ்ட் 22, 1864 அன்று ஜெனீவாவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. (First Geneva Convention) மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு பின்னர் சர்வதேச ரெட்கிராஸ் அமைப்பாக (ICRC) உருவானது. இவ்வியக்கம் அணைத்து நாடுகளிலும் ரெட்கிராஸ் இயக்கமாக உருவாக்கப் பாடுபட்டது.